அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!
Wednesday, August 3rd, 2022
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்திற்கு அதிக பலத்தினை வழங்கும் வகையில் குறித்த அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மன்னார் மடு திருத்தல பெருவிழா ஆரம்பம்!
சோள பயிர்ச் செய்கைக்கு இலவச உரம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழி...
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
|
|
|


