அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Tuesday, May 7th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(07) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன இதனை தெரிவித்தார்.
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பான கலந்துரையாடல் நாளை!
ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர வீடுகளை அமைக்க பிரதமர் நடவடி...
இலங்கைக்கு புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் - கொரிய பிரதமர் ஹான் டக் சூ உறுதிய...
|
|
|


