அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் – ஜனாதிபதி!
Friday, May 15th, 2020
அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை எடுக்கும்போது, அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சரியானதைச் செய்ய முடியாத அரச அதிகாரிகள் நாட்டிற்கு ஒரு சுமை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அரச அதிகாரிகளின் பொறுப்பு பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்த்து புறக்கணிப்பதல்ல என ஜனாதிபதி இதன் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைய அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டின் முன் வைக்கப்படுவதால், அவற்றை பின் தொடரும் போது பகுத்தறிவற்ற சட்டங்கள் தடையாக இருக்க கூடாது என ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


