அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால் மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, March 14th, 2023
வரி சீர்திருத்தங்களினால் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே புதிய வரிசீர்த்திருத்தத்திற்கு உள்வாங்கப்படுவதோடு, 90 வீதமானவர்கள் புதிய வரிச்சீர்த்திருத்தத்திற்கு உட்படுவதில்லை.
எனவே, புதிய வரிச்சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் வருமானம் அதிகரித்தால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


