அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்திருக்கின்றது என பிரதமர் தெரிவிப்பு!
Sunday, April 25th, 2021
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செல்பவர்களை தாம் தடுக்கவில்லை எனவும் அவர்கள் செல்வதற்கான கதவு திறந்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல நாழிதளான சண்டே ஐலண்டிற்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அந்த செய்தியில் பிரதமர் கூறுகையில் – அரசாங்கத்தில் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் வெளியேறி வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம் அவர்கள் செல்வதற்கான கதவு திறந்திருக்கின்றது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை எவருக்கும் உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தாங்கள் அங்கத்துவம் வகிக்கின்ற அரசாங்கத்தையே அவர்கள் விமர்சிக்க விரும்பினால் அவர்கள் அதிலிருந்து வெளியேறுவததை எவரும் கட்டுப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் பிரபலமாக விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருந்து அதனை விமர்சிக்காமல் தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எடுக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


