அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு – சபையின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, July 22nd, 2020
கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொரோனா நெருக்கடியால் அழுத்தங்களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை செலவு செய்ய நேரிடுமெனவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு!
பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!
கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்க...
|
|
|


