அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பந்துல குணவர்தன!
Sunday, August 21st, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹோமகமவில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
தனது பதவி விலகல் கடிதத்தை இன்று இரவு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியதுடன் அப்பதவிகளுக்கு புதியவர்களை நியமித்திருந்தார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும, அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தனவும், டளஸ் அழகப்பெருமவும் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
Related posts:
|
|
|


