அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்!
Monday, August 1st, 2016
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன் அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் .
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே.ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதங்களை வழங்கிவைத்ததன் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, புதிதாக நியமனம் பெற்றுள்ள செயலாளர்களுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


