அமைச்சுகள் – அரச நிறுவனங்கள் பாவனைக்குட்படுத்தும் வளங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை!
Monday, January 17th, 2022
சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சகல அரச நிறுவனங்களிலும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல்வார காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக மேலும் சில வாகனங்கள் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதுதவிர, அரச நிறுவனங்களின் காணி மற்றும் கட்டடம் ஆகியன தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம்!
ஊர்காவற்றுறை கர்ப்பிணி கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிகள்!
தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கிவைப்பு!
|
|
|


