அமைச்சின் முன் அனுமதியின்றி எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்த முடியாது – அமைச்சர் கஞ்சன பணிப்பு!

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில், அமைச்சின் முன் அனுமதியின்றி எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்தக் கூடாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் செலவுக் குறைப்பு என்ற தலைப்பின் கீழ், ஊழியர்கள் பெற்ற கடனுக்கான தவணைகளில் மின்சார சபை செலுத்தும் வட்டி விகிதங்கள் குறித்த அறிக்கையை தமக்கு வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஊழியர் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தந்தை மகன் அடிப்படையில் பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இலங்கை மின்சார சபையின் தலைவர் அவருக்கு இது தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
|
|