அமைச்சர் விஜயகலா, சுவிஸ்குமாரை மக்களிடமிருந்து காப்பாற்றுவதாக வெளியான வீடியோ குறித்து ஆராயுமாறு நீதிமன்று உத்தரவு!

Wednesday, July 26th, 2017

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாழியான சுவிஸ்குமாரை மக்களிடமிருந்து காப்பாற்றுவதாக வெளியான வீடியோ காட்சி தொடர்பான  சம்பவம் பற்றி விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நிதிமன்றால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலையின் வழக்கு தற்யோது யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக்கொண்டு ரயல் அற்பார் முன்னிறையில் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்படு வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் இதுதொடர்பான வழக்கி தொடர்ச்சி ஊர்காவற்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொளியை நீதிபதிக்கு காண்பித்தனர்.

பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி மேற்படி காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

Related posts:

யாழ்.பொதுநூலகத்தில் போக்குவரத்து விதி முறைகள் மற்றும் வீதி விபத்துக்களைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிச...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் ...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ...