வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, February 5th, 2023

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளதாக, 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி என்பன தொடர்பில், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும். அவற்றின் கருத்துக்களின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

அதுபோன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: