அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் நீண்டநாள் போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு!

Tuesday, March 19th, 2024

கண்டாவளை ரங்கன் குடியிருப்பு பிரதேச மக்களின் தீரா பிரச்சினையாக தொடர்ந்துவந்த போக்குவரத்து சேவை பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மக்கள் போக்குவரத்து சேவை இன்றி பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த பகுதி மக்கள் கொண்டுசென்றிருந்தனர்.

இதையடுத்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பிரச்சினை தொடர்பில் நேரில் ஆராயப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களின் பெரும் பிரச்சினையாக நாளாந்தம் இருந்துவந்த பிரச்சினைக்கு நேற்றுமுதல் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ரட்ணம் அமீர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் குறித்த பேருந்து சேவையையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கண்டாவளை அமைப்பாளர், பாடசாலையின் அதிபர் ,பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் தீர்வினை பெற்றுக்கொடுத்த அமைச்சருக்கு நன்றியையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: