அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடு!
Monday, November 5th, 2018
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சராக பெறுப்பேற்றிருந்தார்.
கடந்த நல்லாட்சி காலத்தில் மக்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியில் பல வழிகளிலும் அசௌகரியங்களை சந்தித்து வந்த நிலையில் புதிய அரசில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சரானமையை அடுத்து தமது வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அரசியல் உரிமை சார் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என வடபகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது. இதையடுத்து அவரது பதவியேற்பையிட்டு வடபகுதி மக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
|
|
|


