அமைச்சர் டக்ளஸின் தீவிர முயற்சியே சுகாதாரத் தொண்டர்கள் நிமனம் – தட்டிப்பறித்து புகழ் தேட முயற்சிக்கிறார் அங்கஜன் – ஈ.பிடி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன் குற்றச்சாட்டு!

Saturday, April 3rd, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் ஊடாக வடக்கு சுகாதாரத் தொண்டர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் 800 பேருக்கு நியமனம் வளங்குவதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையில் அவற்றை தாமே ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு நிறைவேற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் வெளிப்படுத்திய கருத்தானது நாகாரீகமற்ற செயல் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவகப் பிரதேச நிர்வாகப் பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய வேலும்மயிலும் குகேந்திரன் ஜெகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினை தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் இருந்து இன்றுவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வந்த நிலையில தற்போது போராட்டத்தில் குதித்திருக்கும் சுகாதாரத் தொண்டர்களின் நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அமைச்சரவைப் பத்திரம் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த முயற்சியில் சுகாதாரத் தொண்டர்களை ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உண்மையில் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் 800 பேர் வரை நியமனம் வழங்குவதற்கு  ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியை தனது முயற்சியால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் கிடைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருக்கும் செய்தி ஊடகங்களில் கண்டு கவலையடைந்தமை மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியை தனது முயற்சியால் நியமனம் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெளிவு படுத்தியிருக்கும் செய்தி டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டை தட்டிப்பறிப்பதாக அமைந்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குகேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் – துரிதகதியில் ந...
இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன - வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெட...
ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அப...