அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு – பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்!
Monday, October 25th, 2021
இன்று முதல் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தேவையில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்..
ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், அத்தகைய நடவடிக்கை இனி தேவையில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் என ஆசிரியர் அதிபர்கள் குழுவை தொலைபேசியில் அச்சுறுத்தியவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரச - தனியார் வைத்தியசாலைகளை இணைத்து சுகாதார சேவை - அமைச்சர் ராஜித்த!
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை - இலங்கை சுங்க பிரிவு தகவல்!
|
|
|


