அமைச்சர் கம்மப்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; இன்றும் நாளையும் விவாதம்!

Monday, July 19th, 2021

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றுகாலை 10.00 மணிக்கு நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றும், நாளையும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதன்போது சுயாதீனமாகக் கருத்துத் தெரிவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது..

விவாதம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...
ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு - சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானி...