அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.
Tuesday, May 26th, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்.
காலமான அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் துயரில் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதமாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.
திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தலங்கம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருந்தும் சிகிச்சை பலநின்றி அவர் காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சட்டவிரோதமாக யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் !
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த அவதானம் - இராஜாங்க அமைச்சர் பிய...
|
|
|


