அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Saturday, September 24th, 2022
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தினை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், கட்டணம் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவைக்காணப்படுமாயின், அதற்கான உரிய நபர் அல்லது குறித்த பயணத்திற்கு பொருத்தமான பொருத்தமான குழு மாத்திரமே சர்வதேச நாடுகளுக்கான பயணத்தில் பங்கேற்க முடியும் என அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவை முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை ஜப்பான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


