அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்!
Tuesday, August 24th, 2021
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
18 வீத பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனைக் குறைபாடு!
வாகனப் பதிவில் பாரிய வீழ்ச்சி!
ஆசிரியர் ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு ...!
|
|
|


