அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Saturday, April 1st, 2023
”அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உள்ளது” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில் –
”சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் முதல் கொடுப்பனவு கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எங்குமே கூறவில்லை.
மேலும் , அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று பலர் சொல்லலாம். யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தான் உண்டு.
ஆகவே, அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமா, இல்லையா என்பது ஜனாதிபதி தான் கூற வேண்டும் என்று அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி!
தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு - பக்தர்கள் கவலை!
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...
|
|
|


