அமைச்சரவைக்கு இடைக்காலத் தடை – நீதிமன்றம் அதிரடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !
இலங்கை வருகிறார் அஹமட் ஷஹீட்!
உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!
|
|