அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையடக்க தொலைபேசிகள் பாவிக்க தடை!

அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கு பின்னர் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள குப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பாக விரைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில் அமைச்சர்களை பார்த்து ஜனாதிபதி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதாவது அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கு பின்னர் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவரவேண்டாம் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது நான் இதனை உத்தரவாக கூறவில்லை. மாறாக கோரிக்கையாகவே விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
Related posts:
|
|