அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
Monday, August 21st, 2023
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது.
இதேநேரம் கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 28 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 59 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 49 சதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலகின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.6 சதவீதமாக அதிகரிக்கும் - பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி ...
வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளின் பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகள் - ஜனாதிபதி பணிப்புரை!
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோனை - சுகாதார அ...
|
|
|


