அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபவின் பெறுமதியில் பாரியளவில் வீழ்ச்சி!
 Thursday, November 3rd, 2016
        
                    Thursday, November 3rd, 2016
            
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 150.01 ரூபாவாக காணப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 147 ரூபாவாக காணப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பை விலை 149 ரூபாவாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாணய மாற்று வீதங்களின்படி, பிரித்தானிய பவுண்ட்டின் பெறுமதி 184.37 ரூபாவாகும். யூரோவின் பெறுமதி 166.97 ரூபாவாகும்.

Related posts:
நாட்டின் சகல பாடசாலைகளிலும் ஆளணி, பௌதிகவளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!
4500 மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு!
தொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        