அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலர் இலங்கை வருகை!
Saturday, March 19th, 2022
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நொலண்ட் இன்றுமுதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பங்களாதேஷ், இலங்கை மற்றும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு தரப்பினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார்.
இந்த விஜயங்களின்போது, அவர் தலைமையிலான தூதுக்குழவினர், சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருளாதாரத்தை உயர்த்த தனியார் முதலீடு - பிரதமர் ரணில்!
பதவி விலகும் ஆளுநர்கள் !
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய புற்றுநோய் ஒழிப்புப்ப...
|
|
|


