அமெரிக்காவால் வெளியாக்கப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன அறிவிப்பு!
Thursday, May 27th, 2021
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாக்கப்பட்ட தகவலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பயண அறிவுறுத்தலில், இலங்கையை 4 ஆம் அடுக்கில் வைத்த அமெரிக்கா, இலங்கைக்கு அமெரிக்கர்கள் யாரையும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
கொவிட் நிலைமை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் பயண அறிவுறுத்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் இலங்கை மக்கள் தேவையற்ற பீதிக்கு உள்ளாக வேண்டாம் என்றும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு - விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்!
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் - சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப...
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளான அனைத்துலக தொழிலாளர் தினம் இன்று!
|
|
|


