அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
Thursday, November 23rd, 2017
அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பருத்தித்துறை நவிண்டில் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம். யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரின் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அமரர் நேற்றையதினம் 22 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் புகழுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
அன்னார் கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பது தோழர் சித்திரன் அவர்களது சிறிய தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய அனைத்து பிரதேசங்களினதும் நிர்வாக செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|
|










