அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Thursday, December 22nd, 2016
வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா, அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த திங்கட்கிழமை இரவு அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரி வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களுக்கு அந்நாட்டு அரசு விசேட அறிவிப்பு!
சிறந்த தலைமுறையை உருவாக்க பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம் – ஜனாதிபதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
|
|
|


