அபிவிருத்தி – தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேண நடவடிக்கை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்கள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் இல்லாமல் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்த அரசாங்கத்தால் முடியுமென்றும் கடனல்லாத வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மூன்று வருடத்தில் 321 பரிரேரணைகள்: வாக்களித்த மக்கள் வீதியில் - சாதனை படைத்தது வடக்கு மாகாண சபை!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று !
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 27 பேர் கடற்படையினரால் கைது!
|
|