அபிவிருத்திக்கான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் – உலக வங்கி உறுதி!
Friday, July 22nd, 2016
இலங்கையின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.
நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது உலக வங்கிக்கான இலங்கை பணிப்பாளர் இந்த விடயத்தை குதெரிவித்தள்ளார்.
அத்துடன் பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுத்து இலங்கை சிறந்த முன்னேற்றத்தை நோக்கி செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திற்காகா 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி நேற்றுமுன்திகம் வழங்கப்பட்டது.
அந்த நிதியுதவியூடாக காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். நகர அபிவிருத்தி திட்டங்களுக்காக 202 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை நன்கொடையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்காக காப்புறுதி!
எதிர்வரும் 19 ஆம் திகதியன்று கட்சி செயலாளர்கள் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு - த...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை அலட்சியம் செய்தால் கைதுசெய்யப்படுவர் - சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா ...
|
|
|


