அபாய நிலை முற்றாக நீங்கிவிடவில்லை – தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது – அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை!

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க பல்வேறு நாடுகளும் முன்வந்திருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் நோய் பரவலுக்கான அபாயம் முற்றாக நீங்கிவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து மக்கள் கூடுதலாக நடமாடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக திருமண நிகழ்விலும், இறுதிக் கிரியைகளிலும் கூடுதலான நேரம் தங்கியிருக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.
Related posts:
புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் - அமைச்சர் அகிலவிராஜ்!
சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
|
|