அபாயக் கட்டத்தில் யாழ்ப்பாணம் – எச்சரிக்கை அவசியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறனர் சுகாதார அதிகாரிகள்!
 Saturday, March 13th, 2021
        
                    Saturday, March 13th, 2021
            
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது..
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்ற இடம்பெற்றது. இதனடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. அந்த வகையில் தற்பொழுது 401 பேர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 204 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 756 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மிக அவதானமாக பொதுமக்கள் செயற்படவேண்டிய அவசியமானது
அதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும். அதேபோல் மரண வீடுகளில் 25பேரும் சமூக கூட்டங்களில் 150 பேர் மாத்திரமே அனுமதிப்பது எனவும் திருமண நிகழ்வில் 150 பேராக மட்டுப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஏனைய களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் விளையாட்டு நிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகளிற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னர் அப்பகுதி சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        