அனைவரும் தத்தமது மதங்களை பின்பற்றும் உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்!

Friday, July 1st, 2016

நாட்டில் வாழும் சகல இனத்தவரும் சுதந்திரமாக தத்தமது மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை உறுதிசெய்யப்படுவதடன் சுதந்திரமான சமூகமொன்றிக்கான கதவுகளும் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை வலுவூட்டுவதற்கு சந்தர்ப்பம் கிட்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

புனித ரமழான் நோன்பை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணி்ல் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இஸ்லாம் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இப்தார் வைபவத்தில் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து மத ரீதியான வைபவங்களை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், இஸ்லாம் மதத்தலைவர்களின் பாராட்டிற்கு இலக்கானதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: