அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

அனைத்து தர மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், தினமும் பாடசாலைக்கு வராவிட்டால் எதிர்வரும் பரீட்சைகளுக்கு மதிப்பெண்கள் கிடைக்காது என தெரிவித்தார்.
மேலும், உயர்தரப் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்பட்டாலும், ஆரம்ப வகுப்புகள் 2024 ஜனவரியில் பாடசாலைகளில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுபட்ட அனைத்து விடயங்களை உள்ளடக்கும் செயற்பாடுகளும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதற்கேற்ப விடுமுறை காலம் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த ஊர்காவற்றுறையில் நடவடிக்கை!
காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது - சமுர்த்தி இரா...
|
|