அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க மாகாணங்களின் ஆளுநர்கள் 5 ஆம் திகதி கலந்துரையாடல்!
Saturday, October 2nd, 2021
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை நிர்ணயிக்க அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடவுள்ளனர்.
அதனடிப்படையிலேயே வடக்கு மாகாணத்தில் 680 ஆரம்பப் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் தெரிவித்தது.
200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஊவா மாகாண ஆளுநரும் ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிப்பதாக தென்மாகாண ஆளுநரும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்க காங்கிரசின் நீதித்துறை குழுவினர் பாராட்டு!
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோனை - சுகாதார அ...
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது நாடாளுமன்றறில்!
|
|
|


