அனைத்து புலனாய்வு பிரிவினரும் தயார் நிலையில் – பாதுகாப்பு செயலாளர் !

Thursday, April 2nd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இராணுவ புலனாய்வினர் உட்பட நாட்டின் அனைத்து புலனாய்வு முகவர்களும் உயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தீவிரவாத மற்றும் பயங்கரவாதம் என்பன மீண்டும் ஒன்றுசேர்வது உட்பட நாடு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்கும் வகையில் தயார்நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பாதுகாப்பு படையினர் முழுமை ஆயத்தங்களுடன் நாடளாவிய ரீதியில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முப்படையினரும் காவல்துறையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1000 கிலோகிராம் போதைப்பொருட்களை ஏற்றிய கப்பலை நேற்று கடற்படையினர் திகோவிட்ட கரைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கு விஜயம் செய்த போதே கமல் குணரத்ன இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts:

9 வயதுச் சிறுவனிடம் குளோரின் கரைக்க கொடுத்த சுகாதார உத்தியோகத்தர்கள் - விசாரணைகள் முன்னெடுக்கப்படுவத...
தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு - மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் கூட்டிக்காட்...