அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை – ஹொங்கொங் அறிவிப்பு!
Wednesday, June 30th, 2021
மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் ஹொங்கொங் தடைவிதித்துள்ளது.
ஹொங்கொங்கின் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து உள்வரும் பயணிகள் விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களை அடக்கும் விடயத்தில் மேற்குலக நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Related posts:
பாகிஸ்தான் இராணுவத்தின் தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு!
கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை - நிதி அமைச்சர் !
கடந்த 24 மணித்தியாலங்களில் 13 விபத்து மரணங்கள்!
|
|
|


