அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் – அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

Tuesday, June 18th, 2024

அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிவைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவை வழங்கும் திறன்களை பெறுவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பிள்ளைகளின் நலனுக்காக மாறுவதற்கு ஆசிரியர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts: