அனைத்து நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண!

Saturday, September 19th, 2020

அரசு நிறுவனங்களில் முறைகேடு செய்யும் அனைத்து நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் –

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உழைப்பவர்கள் அனைவரும் தங்கள் கடமையை மகிழ்ச்சியுடன் சரியாக செய்ய வேண்டும்.

சிறிய மனிதர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது. நிலம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பில் கண்டறிய விசேட பிரிவொன்றை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் உருவாக்கியுள்ளேன்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச சேவையில் பணிபுரிந்துவிட்டு வீடொன்று இல்லாது வாடகை வீட்டில் சிலர் வாழ்க்கின்றனர்.

வழங்கப்படும் அனைத்து வங்கிக் கடன்களையும் பெற்றுக்கொண்டு எங்காவது ஒரு காணியை வங்கிவிட்டு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குப் பிறகு அங்கு சென்று பார்த்தால் அந்த நிலத்தில் வேறு எவராவது இருப்பார். இதுதான் நிலையாக உள்ளது. நிலம் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பில் கண்டறியவே இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதுடன், அரசு நிறுவனங்களில் முறைகேடு செய்யும் எவராக இருந்தாலும் அவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சைட்டம் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வாய்பில்லை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
எரிபொருளை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கு சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது இடையூறு ஏற்படுத்தவோ வேண்டாம் –...
நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில் மயமாக்கல் – இதுவே அடுத்த 20 வருடங்களில் துரித அபிவிருத்திக்கு...