அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு – கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Sunday, April 16th, 2023
இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி 420 அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் அரச நிறுவனங்களை வருடாந்தம் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்க வேண்டியிருந்தாலும் அது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம், காணி சீர்திருத்த ஆணைக்குழு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 04 அரச நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் கோப் குழுவின் முன் அழைக்கப்படவுள்ளன.
அவற்றுள், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பன இவ்வருடம் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அவை மீள அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


