அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை –தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை!
Thursday, December 14th, 2023
அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையம் மூலம் பணம் செலுத்தப்படும் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
14 அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், சைபர் பாதுகாப்புச் சட்டம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதற்கான அதிகாரசபையை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அநீதிக்கு உள்ளான எவரும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் 101 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலநிலையில் மாற்றம்!
மின்சார சபைக்குள் மோசடிகள் தாராளம் - “கபே” குற்றச்சாட்டு!
மாகாணசபை ஆட்சியின் பின்னரே வடக்கின் கல்வி வீழ்ச்சி: இறுதி நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாவட்டம் - ...
|
|
|


