அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு : கோத்தபாய!

Tuesday, September 3rd, 2019

எனது ஆட்சியில் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எனது ஆட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையற்ற தேசம் நிச்சயம் உருவாக்கப்படும். உலக சந்தையில் அதிக கேள்வியில் உள்ள தொழில்வாய்ப்புக்களை தற்போதைய அரசு இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை. இதுவே இன்றைய தொழில் இல்லாப் பிரச்சினைக்குப் பிரதான காரணம்.

நான் ஆட்சிக்கு வந்தவுடன் குறுகிய காலத்துக்குள் நாட்டு மக்கள் சுயமாகப் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்குத் தேவையான செயற்திட்டங்களைச் செயற்படுத்துவேன். தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

இந்த நாட்டில் மூவின மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழ வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அந்த நாள் தொலைவில் இல்லை என்றார்.

Related posts:


முன்னாள் போராளிகளின் வாழ்வு குறித்து வடமாகாண சபைக்கு கரிசனை இல்லையா? - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசப...
இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தே...
தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு வ...