அனலைதீவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் !
Friday, March 27th, 2020
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உலகமே மிரண்டு போயிருக்கும் நிலையில் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.அனலைதீவு பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரை கடற்படை உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனலைதீவு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் ரஸ்ய நாட்டிற்கு சென்று வந்த நிலையிலேயே அவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபரை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
|
|
|


