அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!
 Monday, April 9th, 2018
        
                    Monday, April 9th, 2018
            கடல் மற்றும் ஆற்றுப் பகுதிகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மாற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள.
Related posts:
நிறைவேறியது அத்தியாவசிய சேவை சட்டமூலம்!
தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று நேர்முகத்தேர்வு!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        