அனர்த்தத்தால் வடக்கில் 18,883 பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.
Wednesday, September 21st, 2016
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் வடக்கில் 18,883 பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர். இவர்களில் 4163 பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
ஏனையவர்களுக்கு வட மாகாண சபையினூடாக மாதாந்த கொடுப்பனவு வழங்க முடியுமான போதும் அது வழங்கப்படவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில் நாடுபூராகவும் 30096 வலது குறைந்தவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் மேலும் 39,758 வலது குறைந்தவர்களுக்கு கொடுப்பனவு வழங்க உத்தேசித்துள்ளோம். இதற்கு 2017 வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts:
ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி! - மயங்கிய பெண்!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 3 ஏ !
புதிய சுற்றிவளைப்பு ஆரம்பித்தது இராணுவம் – இராணுவத்தளபதி!
|
|
|


