அநுராதபுரம் – வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!
Saturday, March 5th, 2022
அநுராதபுரத்திற்கும், வவுனியாவுக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளது.
மஹவ – ஓமந்தை தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தினால் இன்றுமுதல் அநுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான பகுதி தற்காலிகமாக மூடுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த திட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதால், அந்த தொடருந்து மார்க்கத்தை மூடும் காலம் பிற்போடப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியால் போக்குவரத்து அமைச்சருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின்படி இந்தத் திட்டம் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வமாக அதிகாரங்கள்!
மீன்பிடி சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
முகக்கவசத்தை தொடர்ந்து அணியுமாறு வலியுறுத்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!
|
|
|


