அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் குறித்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் அறிக்கையின் பிரகாரம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துதல், உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|