அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை அந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா எச்சரிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் என்று எச்சர்த்துள்ளார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் இது தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார ஆலோசனைப் படி விஞ்ஞான ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும். தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை. வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|