அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிருங்கள் – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ அறிவுறுத்து!
Friday, August 16th, 2024
அத்தியாவசிய தேவை தவிர்ந்து கடவுச்சீட்டுக்களைப் பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ...
சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது - சர்வதேச நாணய ந...
|
|
|


